Friday 17 July 2015

Nostradamus

தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்.........

நாஸ்டர்டாமஸ்ஸின் வாழ்கை:


1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில் பிறந்தவர். மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க தரிசனம் பெற்ற மனிதர். யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார்.

இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!
பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.
நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும் கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து கொண்டு தன் வாழக்கையை இனிது தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத் தன் மனைவியைப் பறிகொடுத்தார்.
அதற்குப்பிறகு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப் பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார். அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு அதியசமான அந்த ESP சக்தி ஏற்பட்டது. அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது. பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர் மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம் விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத் தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனையிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக் கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.
நாஸ்டர்டாமஸ்ஸின் தீர்க்கதரிசனம்!
பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல் மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும். பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில் இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள் அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.
1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எல்லாம் எழுதி 10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.
1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப் பின்னரே அவருடைய நூலகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பெறறு வெளியாகி ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார் .
2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.
உலகைப் பற்றிய அவரது தீர்க்கதரிசனங்கள்.........
பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
ஹென்றி மன்னனுக்கு மரண ஆரூடம்:
அப்போது பிரான்ஸை ஆண்டவர் இரண்டாம் ஹென்றி மன்னர். அவர் எப்போது எப்படி இறப்பார் என்று முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் தம்முடைய சுலோகத்தில் கூறியிருந்தார். அதன்படி ஒரு வீர விளையாட்டின்போது அவர் இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பொன்னாலான முகக்கவசத்திலுள்ள துவாரத்தின் வழியாக போட்டியாளாச்ன் ஈட்டி நுழைந்து அவருடைய கண்ணில் பாய்ந்து மூளைக்குச் சென்று முனை முறிந்து விட்டது. கவசத்தையும் கழற்றமுடியாமல் ஈட்டிமுனையையும் எடுக்க முடியாமல் ஹென்றி துடிதுடித்து இறந்தார்.
அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும், அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும், ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியுறுவதுவரை ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி வைத்திருந்ததும் விந்தையானதாகும்
பிரிட்டிஷ் பற்றி கூறியவை:
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச் சந்திக்கும் 290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்:
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
இந்தியா,அமெரிக்கா பற்றி கூறியவை அடுத்த பதிவில்....
தொடரும்....