Monday, 26 September 2016

Titanic பயணிகள்

ஏப்ரல் 15 1912 அதிகாலை வட அடலான்டிக் கடலில் நடந்த டைட்டானிக் என்ற சரித்திர சோகத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும்...
அதில் பயணம் செய்த 2224 பயணிகளில் உயிர் தப்பியவர்கள் 705 பேர்.
1997 இல் வெளிவந்து சக்கை போடு போட்ட டைட்டானிக் திரை படம் மூலம் இந்த தகவல்கள் எல்லாம் உலகில் பல பேருக்கு தெரிய வந்தது...
ஆனால்..
அந்த உயிர் தப்பிய பயணிகளில் பல பேருக்கு 
அதன் பின் நிகழ்ந்ததை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது. குறிப்பாக டைட்டானிக் இல் உயிர் தப்பிய பல பேர் அடுக்கடுக்காக தற்கொலை செய்து கொண்டார்கள்

டைட்டானிக் மூழ்கி 6 மாதம் கழித்து.

ஏனே ராபின்சன் என்ற பெண்மணி ...நீராவி கப்பலில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. அவர் டைட்டானிக் இல் ஸ்டீவாய்டிங் வேலை செய்தவர்..
வாஷிங்டன் டாட்ஜ் என்பவர் 1919 இல் தன்னை தானே சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.
1927 இல் ஹென்றி வில்லியம் ஒரு மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
இவர் கொஞ்சம் குண்டு ஆக்ருதி கொண்டவர் . டைட்டானிக் இல் தப்பும் போராட்டத்தில் லைப் போட் இல் குதித்த போது ஒரு பெண்ணின் மேல் குதித்து அந்த பெண்ணின் இடுப்பு எலும்பை உடைத்திருந்தார்.
1927 ஜான் நிகின்சன் ..ஒரு தங்கம் தேடும் பேர்விழி... தனக்கு தானே தீ வைத்து கொண்டு இறந்து போனார்.
1945 இல் ஜான் தேயர்... டைட்டானிக் இல் தன் தந்தையை பறிகொடுத்து தாய் உடன் உயிர் தப்பியவர்.. தனது கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்து கொண்டு இறந்து போனார்.
1951 ஜான் மார்கன் டேவிட் அதீத போதை வஸ்து வால் இறந்து போனார்..
பில்லிஸ் ஜென் குவிக்கி டைட்டானிக் இல் தப்பிய குழந்தை ..அவர் வளர்ந்து 45 வயதில் தன்னை தானே சுட்டு கொண்டார்...
பிரெட்ரிக் பிலீட்... ஐஸ் பாறை டைட்டானிக் ஐ நெருங்குவதை லைவ் இல் பார்த்து கத்தி கூச்சல் இட்டவர்..
1964 இல் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்..
இப்படி டைட்டானிக் சர்வைவர் பல பேர் தற்கொலை செய்து கொள்வதை ஆராய்ந்த போது அவர்களுக்கு தனிப்பட்ட வெவேறு காரணங்கள் இருப்பது தெரிந்தது..உதாரணமாக வாஷிங்டன் டாட்ஜ் ஊழல் வழக்கில் சிக்கியவர்.. ஜான் நிக்கின்சன் தங்கம் கிடைக்காத விரக்தியில் இறந்தவர்.
இப்படி இருந்தாலும் ...இப்படி இறந்தாலும்....ஆய்வாளர்கள் டைட்டானிக் தற்கொலை களுக்கு காரணம் அவர்களுக்குள் மறைந்திருந்த டைட்டானிக் டிஸாஸ்டர் என்ற பூதம் தான் அவர்களை தற்கொலைகு தூண்டியது என்றார்கள்.. அதாவது அன்று நடந்து கசப்பான அனுபவம் அவர்கள் மனதில் அதீத பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்றார்கள்..
ஆய்வாளர்கள் இப்படி சொன்னாலும் மக்கள் வேறு மாதிரி பேசி கொண்டார்கள் அதாவது தப்பி பிழைத்தவர்களை டைட்டானிக் சாபம் பின் தொடர்வதாக நம்பினார்கள்..
அந்த சாபத்திற்கு ஆளானவர்களில் ஒருவர் தான் masaboomi hosono டைட்டானிக் இல் உயிர் தப்பிய ஒரே ஜப்பானியர்..

அங்கே இறந்தவர் மற்றும் தப்பி தற்கொலை செய்தவர் இவர்கள் இரண்டையும் விட பரிதாபமானவர் ஹோசோனா...
ரஷ்யாவின் ரயில்வே சிஸ்டமை ஆராய ஜப்பான் ட்ரான்ஸ்பர்டேஷன் மினிஸ்டரி யால் அனுப்ப பட்டவர் தான் மாசாபூமி ஒசானோ..
சம்பவம் நடந்து 30 நிமிடம் கழித்து 2 ஆம் வகுப்பு பயனியால் எழுப்ப பட்டார் இவர் ஜப்பானியர் என்பதால் இவருக்கு 3 வது வகுப்பு தான் ஒதுக்க பட்டிருந்தது..
மிகுந்த சிரமத்திற்கு பின் தான் இவரால் லைப் போட்டில் ஏறி உயிர் தப்ப முடிந்தது... காப்பாற்ற பட்டு அமெரிக்கா சென்று பின் தன் தாயகம் திரும்பினார் .
ஆனால் அவர் தாயக பயணம் அவருக்கு இனிமையாக அமையவில்லை...
இவரை பார்க்கும் பொது ஜனம் எல்லாம் அவரை தூற்றி கேவல படுத்தினார்கள்... இத்தனை பேர் இறந்து இருக்க நீ மட்டும் உயிர் தப்பி இருக்க கூடாது என்றார்கள்.. அவர்களுடன் சேர்ந்து நீயும் இறந்து இருக்க வேண்டும் அதுதான் நியாயம் என்றார்கள்..
அப்படி பட்ட உணர்ச்சி அந்த நாடு பூராவும் அவர் மேல் காட்டியது...
அந்த நாடு பூராவும் அவரை சமூக துரோகி என முத்திரை குத்தியது..
நாளேடுகள் அவரை கேவலமாக சித்தரித்தன...
நாள்தோறும் பல பேர் அவரை தற்கொலை செய்ய வற்புறுத்தி நாலெடுகளுக்கு கடிதம் எழுதினார்கள்..
பாட புத்தகத்தில் அங்கத்தி புரபசர்கள் ஆலோசனை படி அவரை நாட்டின் களங்கதிர்கான் அடையாளம் என சித்தரித்தார்கள்..
அவருடைய வேலையை அவரது அரசாங்கம் பிடுங்கி கொண்டது பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் அவரை வாடகைக்கு அமர்த்தி சாகும் வரை இங்கேதான் வேலை செய்ய வேண்டும் என பணித்தது.. இம்முறை அவரது பழைய வேலை அவருக்கு திருப்பி தரப்பட வில்லை
நீ சீக்கிரம் செத்து போ என்கிற போன் கால்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தது...
இத்தனையும் பொறுத்து கொண்டு மஸுபூமி ஓசொனோ ஒரு முறைகூட தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றாலும் தான் டைட்டானிக் இல் செத்திருக்கலாமே என்று நினைத்து ஏங்காத நாள் இல்லை.
அவர் தனது டைட்டானிக் அனுபவத்தை யாரிடமும் வாய் திறந்து பகிர்ந்து கொள்ளவில்லை அவரிடம் பரிதாப பட்டு அதை கேட்க ஆள் யாரும் இல்லை..
தான் உயிர் தப்பியதை தவிர தான் செய்த தவறென்ன என்பது புரியாமல்
1939 வரை வாழ்ந்து இறந்து போனார்.
அவர் மரணத்திற்கு பின்னும் அவர் குடும்பத்தை நாட்டுக்கே களங்கமான குடும்பம் என்ற முத்திரை சூழ்ந்தது..
அவர் டைட்டானிக் இல் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது .. டைட்டானிக் இல் காப்பாற்ற பட்ட ஒரே பொருள் அதுதான் என்ற உண்மை.....1997 இல் ஜேம்ஸ் கேமரூன் வந்து டைட்டானிக் படம் எடுக்கும் வரை
உலகத்துக்கு தெரியாமல் இருந்தது..
அந்த படத்தை பார்த்த பின் தான் ஜப்பான் மக்கள் அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் மீது கொஞ்சம் கருணையோடு நினைத்து பார்க்கவே தொடங்கினார்கள்..
டைட்டானிக் இல் பயணித்தவர்கள் அனைவரும் உண்மையில் சாபம் துரத்திய பயணிகள் தானா அல்லது விதிஎனும் விளையாட்டின் கோர பிடியில் சிக்கி கொண்டவர்களா என்பது கேள்விக்குறி ?????....