தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டது என்றால் அது நாகப்பட்டினம் மாவட்டம் தான் வரலாற்றில் அந்த பண்டைய காலத்திலையே இங்கிருந்து எகிப்து மற்றும் இன்றைய சிரியா போன்ற நாடுகளுக்கு வணிகம் ஏற்பட்டுள்ளது...ஏன் யாருமே இதை கவனிக்கவில்லை என்பது தான் புரியவில்லை..மற்றும் நாகை பகுதி பொன்முட்டையிடும் வாத்து போன்றது எப்படி என்பதை பின்னர் படிக்கும் போது விளங்கும்..இருந்தாலும் புறக்கணிக்க பட்டது...மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் உதவியுடன் நாகை பகுதியில் போர்கத்துகீஸியர் தான் முதல் முதலாக மக்களின் வணிகத்தை சுரண்டி எடுக்க ஆரம்பித்தனர் (இதைப்பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்) இவர்களுக்கு பிறகு நாகை பகுதிக்கு வந்தது டச்சுக்காரர்கள் (அதாவது இன்றைய ஹாலந்து மக்கள்) இவர்களை நமது தமிழர்கள் ஆலந்து காரர்கள் என்றாகிவிட்டார்கள் ஆலந்தூர் என்ற பெயர் ஏற்பட்டதற்கு காரணம் இது தான் Holland + ஒல்லாந்தர்+ ஒல்லாந்துகாரர்கள் = ஆலந்துரார்கள் = ஆலந்தாருடைய ஊர் +ஆலந்தூர் ...ஏற்கனவே போர்த்துகீசியருடன் நாயக்கர்கள் செய்த ஒப்பந்தத்தை அப்படியே டச்சு காரர்களான ஆலந்து கார்ரகளிடம் ஒப்படைத்தார் விஜயநகர நாயக்கர்கள்1617 இல் நாயக்கருக்கும் ஆலந்து நிறுவனத்தாருக்கும் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது அதில் நாகை மாவட்டம் பொய்யூர் என்ற பகுதி (இன்றும் உள்ளது மாங்காய் எழுமிச்சை போன்றவை விழையும் மண்) மற்றும் புத்தூர் முட்டம் பெருவளச்சேரி இன்றய பொரவச்சேரி அந்தோணி பேட்டை இன்றைய அநதனபேட்டை கருவேப்பங்காடு நிருந்தன மங்களம் அழிஞ்சிலா மங்களம் சங்க மங்களம் மஞ்சட் கொல்லை (இன்றைய மஞ்சக்கொல்லை) நரியங்குடி இந்த 10 ஊர்களும் பழையபத்தூர் எனும் பெயரில் டச்சுக்காரர்களான ஆ(ஹ)லந்து காரர்களுக்கு கொடுக்கப்பட்டது இந்த 10 ஊருகளுக்கு மட்டும் ஆலந்து கார்ரகள் ஆண்டுக்கு 1200 பொண் பணமாக தரவேண்டும் ஒட்டுமொத்த நாகை மாவட்ட பகுதி வாணிபத்திற்கு ஆண்டுக்கு 3000 பொண் தரவேண்டும் என்று பட்டய ஒப்பந்தம் செய்யப்பட்டது டச்சுக்காரர்களான ஆலந்துகாரர்களுக்கும் நாயக்கர் மன்னர்களுக்கும் நடந்த ஒப்பந்தம் இது இது நடந்த ஆண்டு 1617..
senior captain signor bikkururoarjunior captain signor thomas vanderosignor admiral rajklof vancoens
இந்த 3 டச்சு காரர்கள் கைக்கு வந்தது இவர்கள் வாணிபமாக வந்து ஆட்சியை கைப்பற்றினர்... நாகையை மையங்கொண்டு முதல் முறையாக ஆட்சி செய்தது இவர்கள் தான் இவர்களுக்கு முன்பு கூட யாரும் நாகையை தலைநகராக வைத்து கொண்டு ஆட்சி செய்யவில்லை...