உங்களிடம் போதிய பணம் இருந்தால் இணையத்தில் ஒரு மனிதனை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை
நீங்கள் நேரிடையாக காணலாம் .. ஆம் இது உண்மைதான் ஆழ் இணையத்தின் (deep web )
பல கோர முகங்களில் இந்த ரெட் ரூம் இணையங்களும் ஒன்றாகும் .. முந்தைய பதிவுகளிலேயே
டீப் வெப் பற்றி பல விடயங்களை நாம் கண்டு உள்ளோம் .இருந்தாலும் ஒரு சிறு முன்னோட்டம்
டீப் வெப் என்பது நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் இணையத்தில் வரையறுக்க படாத
இணையங்களின் ஒரு பகுதி ஆகும் .கூகுள் யாகூ போன்ற தேடுதளங்களில் வரையறுக்க படாத
இணையங்கள் என்று வைத்துகொள்ளுங்க .. டீப் வெப் இணையங்களை டார் என்ற பிரத்தியேக
ப்ரௌசெர் மூலம் தான் தொடர்புகொள்ள முடியும் ..
இந்த டீப் வெப் நமது சாதாரண இணையத்தை விட 19 மடங்கு பெரியது .. ஆயுத விற்பனை ,போதை பொருள் விற்பனை , போலி அடையாளங்கள் , குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் பாலியல் வன் கொடுமை என டீப் வெப் இல் திரும்பும் இடம் எல்லாம் கொடூர விடயங்களே கொட்டி கிடக்கும் .. இதில் ஒரு பகுதி தான் இந்த ரெட் ரூம்ஸ் .
ரெட் ரூம்ஸ் என்பது ஒரு மர்மமான இணைய தளங்கள் ஆகும். இதில் நீங்கள் நேரிடையாக ஒரு மனிதரை சித்திரவதை செய்வதை போதிய பணம் கொடுத்தால் பார்க்க முடியும் .. மேலும் பணம் கொடுத்தால் அவர்கள் அந்த மனிதரை என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கூறலாம் .. அதாவது
உங்கள் விருபதிர்க்கேர்ப்ப அந்த மனிதர் சித்திரவதை செய்து கொல்ல படுவார் மற்றவர்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள் ..
பெரும்பாலும் வீடுகள் அற்ற ஏழை எளியவரையே கடத்தி இதில் பயன் படுத்துகிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது ..அனால் இந்த ரெட் ரூம் இணையங்கள் வெறும் பொய் புரட்டு என்று பல கருத்துக்கள் நிலவுகின்றன .. இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரகணக்கான சாமானிய மக்கள் ஆர்வத்தில் இன்னும் இந்த
இணையங்களை கண்டுபிடிக்க ஆழ் இணையத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . அந்த லச்சக்கனக்கான மக்களில் நானும் ஒருவன்
எங்களின் தேடுதலுக்கு தீனி போடும் விதமாக ஆழ் இணையத்தில் கிடைத்த இணையங்கள் சில தான் ISIS redroom மற்றும் live sucide . இவை இரண்டும் போலி என்று சில மாதங்களுக்கு முன்பு தான் அறியப்பட்டது ..
2 மாதங்களுக்கு முன்பு ஆழ் இணையத்தில் புதிதாக தோன்றி பெரும் பரபரப்பை ஈர்த்த ஒரு இணையம் தான் AL.I.C.I.A இதை முகப்பு பகுதிய பெரும் மர்மத்தோடு இருந்தது இந்த இணையம் உண்மையான ரெட் ரூம் என செய்திகள் ஆழ் இணையம் முழுவதும் பரவின .இந்த இணையத்தின் உள்ளே நுழைய சில முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும் . என்னுடைய ஆழ் இணைய நண்பர் ஒருவரும் அந்த இணையத்தில் நுழைய பல்வேறு முயற்சிகளில் இடுபட்டார் இருந்தும் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை . இப்படி இருக்கையில் இந்த இணையமும் உண்மையான ரெட் ரூம் அல்ல என செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த ரெட் ரூம் இணையங்கள் shadow web என்னும் இணையத்தின் இன்னும் மோசமான கொடூரமான பகுதியில் செயல் படுகிறது எனவும் செய்திகள் வெளிவந்தன ..
ஆழ் இணையத்தை பற்றி செய்திகள் வெளியிடும் பிரபல youtube channel "someordinarygamers " என்னும் சேனல் உண்மையான ரெட் ரூமை தொடர்பு கொண்டதாக கடந்த மாதம் செய்தியை வெளியிட்டது டார் browser மூலம் இந்த இணையங்களை தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறினார் .
பிரபல hostel திரைப்படத்தின் கதை இது போன்று மக்களை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை போன்ற நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டதே அதன் இயக்குனர் ஒரு ரேடியோ பேட்டியின் பொழுது இந்த படத்தின் கதைக்கு காரணம் இது போன்ற இடங்கள் இந்தோனேசியாவில்
உள்ளதாக தான் கேள்விப்பட்டதாக கூறியுள்ளார் .