Thursday, 21 April 2016

ஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..

ஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்கும் அதே சமயம், மென்மேலும் போர் களங்களை வெற்றிகரமாய் கைப்பற்ற உதவும் 'வார்-வின்னிங் சூப்பர் வெப்பன்'களை (war-winning super-weapon) அதிகம் உருவாக்க உத்தரவிட்டார் ஹிட்லர்..!  வி2 ராக்கெட்டுகள் மற்றும் முதல் தலைமுறை ஜெட் போர் விமானங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களில் ஹிட்லரின் மிகவும் ரகசிய ஆயுதமான ப்ளையிங் சாசர் மிகவும் மர்மமான ஒரு விடயமாகவே இன்றுவரை நீடிக்கிறது.

 ப்ளையிங் சாசர் - நிஜமாகவே உருவாக்கம் பெற்றதா அல்லது ஒரு கட்டுக்கதையா என்ற குழப்பத்திற்கு  பதில் ...லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் குண்டு வீசுவதற்காக, ஜெர்மனியானது பறக்கும் சாசரை வடிவமைக்க திட்டமிட்டது. அப்படியாக, மணி-வடிவ பறக்கும் பொருளாக, அதாவது ஏலியன்களின் பறக்கும் தட்டு போலிருக்கும் வடிவமைப்பில் ப்ளையிங் சாசர் ஆனது நாஜிக்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.முன்னாள் போலாந்து பத்திரிகையாளர் ஒருவர் ஜெர்மானியர்கள் யூஎப்ஒ எனப்படும் பறக்கும் தட்டு ஒன்றை உருவாக்குகின்றனர் என்று கூறி கோட்பாடு உருவாக்கியுள்ளார்.இதுதான் ஜெர்மன் யுஎஃப்ஒ-வின் முன்மாதிரி (Prototype of a German UFO) அதனை தொடர்ந்து ஹிட்லரின் நாஸி விஞ்ஞானிகள் மூலம் ப்ளையிங் சாசர் விமான வகையானது உண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது மிகவும் அதிநவீன ஆயுதமான இது பறக்கவிடப்பட்டு இருக்கலாம் என்றும் இந்த ப்ளையிங் சாசர் ரகசிய திட்டமானது நிகழ்ந்துள்ளது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களும் இருக்கின்றன.

அந்த ஆதாரங்களில் குறிப்பாக, 1944-ல் தேம்ஸ் மீது மிகவும் குறைவான உயரத்தில் ஜெர்மன் இராணுவத்தின் இரும்பு கிராஸ் குறியீடு கொண்ட ஒரு பறக்கும் தட்டை பார்த்ததாய் சாட்சிகள் உள்ளன. அது மட்டுமின்றி அப்போது வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மர்மமான பறக்கும் தட்டு' சார்ந்த செய்தி கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையுடன் சேர்த்து நகரத்தின் மிக உயரமான கட்டங்களுக்கு மேல மிகவும் வேகமாக (high speed) பறக்கும் மர்மமான கருவியின் புகைப்படமும் வெளியானது. மேலும் "ஜெர்மானிய பறக்கும் தட்டு ஆயுதமாக ப்ளையிங் சாசர் என்பது நிச்சயமாக இருக்கிறது என்று அமெரிக்கர்கள் அதிகம் நம்புகிறார்கள்" என்றும்  அக்கட்டுரை குறிப்பிடுகின்றது உடன், ப்ளையிங் சாசர் உருவாக்கம் பற்றிய பெரும்பாலான தரவுகளை (Paper works) ஜெர்மானியர்கள் அழித்துவிட்டனர் என்றும் அக்கட்டுரை தெரிவித்துள்ளது. இருப்பினும் கூட 1960-களில் கனடா நாட்டின் பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் ஜெர்மனியின் ப்ளையிங் சாசர் போன்றே ஒரு பறக்கும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் அது பறந்ததா என்பது பற்றிய ஆதரங்கள் இல்லை. ஜெர்மனியின் பறக்கும் சாசர் திட்டத்தில் ருடோல்ப் ஸ்க்ரீவர் (Rudolf Schriever) என்பவர் எஞ்சினீயர் மற்றும் டெஸ்ட் பைலட்டாகவும்,ஓட்டோ ஹபர்மோல் (Otto Habermohl) என்பவர் மற்றொரு எஞ்சினீயராகவும் பணியாற்றியுள்ளனர். அதனாலேயே பறக்கும் சாசர் திட்டமானது ஸ்க்ரீவர் - ஹபர்மோல் (Schriever-Habermohl scheme) என்ற பெயரின் கீழ் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

1941 - 1943 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ப்ராஜக்ட் ஆனது ப்ராக்கை (Prague) மையமாக கொண்டு இயங்கியது தெரியவந்துள்ளது.  சுமார் ஆறு கெஜம் அளவில் உள்ள வெள்ளி நிற பறக்கும் சாசரை பல்வேறு காலகட்டங்களில் பலமுறை பார்த்துள்ளதாக நேச நாட்டு கைதிகள் சாட்சியம் தெரிவித்துள்ளதும் ப்ளையிங் சாசருக்கான பெரிய ஆதாரம் ஆகும். ப்ளையிங் சாசர் வடிவமைப்பு ப்ராஜக்டில் சுமார் 15 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டன என்கிறார்  இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மற்றொரு எஞ்சினீயர் ஆன ஜோசப் ஆன்ட்ரியாஸ் எப்.உண்மையில் ப்ளையிங் சாசர் என்று ஒன்று கிடையவே கிடையாது பிஎம்எக்ஸ்எம்7இ மெஸ்ஸர்ஸ்ஷிமிட் 262 ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் தான் (BMXM7E Messerschmitt 262 German Luftwaffe plane) என்றும் கூறப்பட்டது . போருக்கு பின்பு பல ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவி புரிந்தனர் என்பதும், ப்ளையிங் சாசர் உருவாக்கம் என்ற கோட்பாட்டை உருவாக்கியது முன்னாள் போலாந்து பத்திரிகையாளரான இகோர் விட்கவ்ஸ்கி (Igor Witkowski) என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - #tamilgizbot