Thursday, 5 May 2016

சுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....


நீங்கள் ரங்கராஜன் இல்லை...
எழுத்து உலகத்துகே ரங்க"ராஜ்ஜியம்"

சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்று எந்த புரிதலும் இல்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் படித்து கொண்டிருந்த காலம்....சுஜாதாவை செவி வழியாக அறிமுக படுத்திய என் மாமா சீத்தாராமனின் சிபாரிசு ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’...ஒரு நாள் மதிய உணவிற்கு பின் பலர் குறட்டையோடும் சிலர் அரட்டையோடும் மசமசத்துத் திரியும் மதிய வேளை..படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஏங்கும் பொது, செப்பனிடப்பட்ட அட்டையோடு 
ஒரு புத்தகத்தின் ஹீரோ எண்ட்ரி!!! புத்தகத்தின் பெயர் சாஷாத் 

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
ஹீரோ பெயர்"சுஜாதா" . 


படிக்க எளிமையாக இருக்கும் புத்தகங்கள் படிப்பது அப்போதைய வழக்கம் ,ஸ்ரீரங்கத்து தேவதைகள் கொஞ்சம் 
ஸ்பெஷல் ...
கும்பகோணம் தாண்டாத எனக்கு.....ஸ்ரீரங்கத்தையே கண் முன் கொண்டுவந்தவர், சுஜாதா.

முதல்வன், இந்தியன் போன்ற படங்களிள் அவரது படைப்புகளின் வசனங்களை கண்டு,.....ச்ச...மனுசன் என்னமா எழுதிற்கான்..என்று எண்ணிய நேரங்கலும் உண்டு.
இந்தியன் படத்தில் ”மத்த நாட்லலாம் கடமையை மீறதாண்ட லஞ்சம், இங்க மட்டும் தான் கடமையை செய்றத்துகே லஞ்சம்” என்ற இந்தியாவின் அல்காரிதத்தை இரண்டு வரியில் போட்டு உடைத்தவர்..

முதல்வனிலும்....ரகுவரனுகும் அர்ஜுனுகும் இடையே ஒடும் 15 நிமிடம் நேர்கானல்.....”ரகுவரன்: எதிர் கட்சிக்கிட்ட எவ்வளவு பணம் வாங்குந.
அர்ஜுன்: நீங்க எதிர்க்கட்சியா இருந்தா எவ்வுலொ குடுத்துருப்பீங்க” 

என்று..ரங்கராஜ் பாண்டே கூட தோல்வியை தழுவும் இடம் அது....


”ரகுவரன்: ஒரு நாள்,.......ஒரு நா........ள்,....நீ CM ஆ இருந்துபார் அப்போ தெரியும்....


அர்ஜுன்: (5 sec silence) - சரி , இது சாத்தியம் நா......நான் CM ஆவுரென்........ ”. 


ஒரு நொடி , ஒரே ஒரு பதில்.....தேர்தல் இல்லாமல், தீர்ப்பு இல்லாமல், ஆட்சியை கலைக்காமல் ....முதலமைச்சரை நிராயுதபானியாக்கியதும், செய்தியாளனை முதலமைச்சராக்கி அழகு பார்த்ததும்.....அவரது எழுத்துக்கு மட்டுமே உள்ள தனித்துவம்....
விற்பனை வரி கட்ட உத்தரவு போடும்...அர்ஜுனை டிவி வழியாக பார்த்து..ஒரு நாளைக்கு விற்பனை வரி எவ்வளோயா வருது என்ற ரகுவரனின் கேள்விக்கு...."அய்யா கட்சிக்குங்களா இல்ல நாட்டுக்குங்களா” என்ற அமைச்சரின் மருமுனை கேள்வி தான் சுஜாதா கொளுத்தி போடும் நகைச்சுவை பட்டாசு.........
Technologyயிலும் சுஜாதாவின் தூரிகை தொடாத இடம் இல்லை.....இன்னும் இரணூரு வருசம் தான் அப்பரம் london தண்ணிக்குள்ள போய்டும்.. என்ற காக்கை சித்தர் getup போட்ட நடிகர் விவேக்கின் அனுமானம் அது

....21st centuary ஃபுல்லா விண்டோஸ் ஓஸ் தான் எல்லா பெர்சனல் கம்பூட்டரையும் கைகுள்ள போட்டுக்கும் என்பதை 19ஆம் நூற்றாண்டுகளிளே கணித்து சொன்னவர்...

விண்டோஸ் ப்ராடெக்ட தான் உலகமே உபயொகிக்கனும் அதுக்குதான் MAC OSக்கு மட்டும் வித்த MS officeஅ அவனோட ஓஸ் கும் போற்றுக்கான்
நாளைய அலுவலகங்களில் எல்லா வேலைகள் அதனுள் சென்று விடும்......windowsக்கு மாற்று வழி இல்லாமல்.... windowsஅய் கைவிடமுடியாமல் திணறுவோம்....அதுக்கு தான் billgates ஆசை படுறான்....என்று இன்றய நிலையை nostradamusயே விஞ்சிய பல வியூகங்களின் மூலம் 20 வருடத்திற்கு முன்பே சொன்னவர்.

அவரின் புத்தகங்களிள் மூழ்கும் ஒவ்வொரு வாசகனும்.......மூழ்கி எழும் பொழுது ப்றம்மித்து போகிறான்....
”A creator should educate his viewers"என்பதை அவரின் எழுத்துகள் வாயிலாக பலருக்கு உணர்த்தியவர்..
பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏறாத big-bang theory, auteur theory, Kimberley process எல்லாம் அவரின் புத்தகங்களின் மூலம் புரியத் தொடங்கின.சத்தியமாக அவர் இல்லையென்றால் "one sharp stop"," cognitive intellectual perfection","bullet points". போன்றவை எல்லாம் நாம் அறிய வாய்ப்பே இல்லை!!!


நேற்று சுஜாதா அவர்கள் பிறந்தநாள் ...அவரை மறக்க விருப்பம் இல்லை .....
அவர் பெயரை எப்பொழுது எழுதினாலும் பின்பு 2 அல்லது 3 ஆச்சரியக்குறிகள் வருவதை தவிர்க்க முடியவில்லை .உண்மையிலேயே சுஜாதா!!! ஒர் ஆச்சரியக்குறி தான் .

இன்று அவர் இல்லையென்றாலும் அவர் எழுத்துகளின் பிரதிகள் அவரின் பிரதிநிதியாய்!!!


‪#‎ஜோர்பாதரணி_நாட்குறிப்பு‬